கொட்டக்குடி ஆற்றில் திடீர் வெள்ளம்...பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொட்டக்குடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம்
கொட்டக்குடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம்

தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என வனத்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குரங்கணி, கொட்டக்கூடிய உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சிற்றாறுகள் சேர்ந்து, கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அந்த ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பரித்து செல்லும் கொட்டக்குடி ஆறு
ஆர்ப்பரித்து செல்லும் கொட்டக்குடி ஆறு

நீர்வரத்து உயர்ந்திருப்பதால் இப்பகுதியில் பொதுமக்கள் யாரும் குளிக்க வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றல் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்கவும், குளிக்கவும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம் என வனத்துறை, பொதுப்பணித்துறை எச்சரிக்கை
ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம் என வனத்துறை, பொதுப்பணித்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆறுகளில் வரும் வெள்ளத்தின் அளவுகளை பொதுப்பணித்துறையினரும், வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் குறித்து வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in