போக்குவரத்து நிறுத்தம்... 15 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் தீ... கடும் புகை சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி!

கரூர் மாநகராட்சியில் பற்றி எரியும் நெருப்பு
கரூர் மாநகராட்சியில் பற்றி எரியும் நெருப்பு
Updated on
2 min read

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பின்னர் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் பனிகள் நடைபெறுகிறது. ஏராளமான டன் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு இருப்பதால், மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன.

கடும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கடும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திடீரென இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் கருர் தீயணைப்புத்துறை வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர், 2 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவிக் கொண்டே இருந்தது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் அந்த சாலை வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கடும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

இந்நிலையில் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீ காரணமாக, இன்றும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. குப்பைகள் எரிவதால் ஏற்படும் புகை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளும் அந்த பகுதி வழியாக பயணிக்கும் போது புகை காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in