வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை... 56 பேர் உயிரிழந்த பரிதாபம்!

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை... 56 பேர் உயிரிழந்த பரிதாபம்!

இந்தியா முழுவதும் வெப்ப அலையால் 56 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலையின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அவசியமின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கடுமையான வெப்ப அலையால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது.

வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்பு
வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்பு

இந்த நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) வெளியிட்டு அறிக்கையில், இந்தியா முழுவதும் வெப்ப தாக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் வெப்ப தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்கள் பற்றிய முழு அறிக்கைகள் பின்னர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உத்தரப் பிரதேசத்தில் 166 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மாநில தரவு தெரிவிக்கின்றது.

பீகாரில் 22 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மே மாதத்தில் 46 பேர் பலியாகி உள்ளனர். எனினும், வெப்ப தாக்க பாதிப்பு எண்ணிக்கை 1,918 ஆக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இதேபோன்று மாநிலங்கள் பகிர்ந்த தகவலின்படி, 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, மார்ச் 1-ம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் பதிவான வெப்ப தாக்க எண்ணிக்கை 24,849 ஆக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது

வெப்ப அலை
வெப்ப அலை

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மத்தியப பிரதேசத்தில் அதிக அளவாக 14 பேரும், மகாராஷ்டிரத்தில்11 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in