காவிரி விவகாரம்… தமிழ்நாடு அரசின் மனு மீது இன்று விசாரணை!

காவிரி விவகாரம்… தமிழ்நாடு அரசின் மனு மீது இன்று விசாரணை!
Updated on
1 min read

காவிரியில் உரிய நீரை திறந்துவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

காவிரி நீர் குறித்த உத்தரவுகளை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு முறை விசாரணை நடைபெறாததால், மனுவை செப்டம்பர் 11 அல்லது 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி முறையிட்டனர்.

அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றால் புதிய அமர்வை ஏற்படுத்தும் வகையில் தலைமை நீதிபதியிடம் தான் முறையிட வேண்டும் என்று கூறியதை அடுத்து, தற்போதுள்ள அமர்வே விசாரிக்கட்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.ஆர்.கவாய், தமிழ்நாடு அரசின் மனு செப்டம்பர் 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in