இப்படி ஒரு மனைவி யாருக்கும் கிடைக்கக்கூடாது... நடாஷாவிற்கு சாபம் விடும் ஹர்திக் ரசிகர்கள்!

நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா.
நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா.

உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி பெற்ற பிறகு முதல் முறையாக ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ஹர்திக் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்.

பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகஸ்தியா பாண்டியா என்ற மகன் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு, தனது பெயருடன் பாண்டியாவின் பெயரையும் சேர்த்து கொண்டார்.

நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா.
நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா.

இந்த நிலையில், அந்த பெயரை நீக்கிய நடாஷா, ஹர்திக் உடனான சில புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் விவகாரத்து செய்யப்போகின்றனர் என்ற வதந்திகளுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும் விவாகரத்து பெறப் போவதாக ஐபிஎல் போட்டிகள் முடிந்த கையோடு பேச்சு கிளம்பியது. எனினும் இந்த விவாதத்திற்கு இருவரும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா.
நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் ஹர்திக் பாண்டியா.

இந்த நிலையில், பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகித்தார்.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை

ஆனால், உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஹர்திக்கிற்காக ஒரு பதிவு கூட சமூக வலைதளங்களில் போடாததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில், நடாஷா தனது இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், அவர் தனது ஆடைகள் மற்றும் பணப்பையை காட்டுகிறார். இந்த புகைப்படங்களுக்கு 'பிட் செக்' என அவர் தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்தது. ஆனால், அதோடு, ஹர்திக் குறித்தும் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில், நீங்கள் ஹர்திக்குடன் இருக்கிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள் என்று விரக்தியுடன் கேள்வி கேட்டுள்ளனர்.

'ஹர்திக் உலகக் கோப்பையை வென்றார், அவருக்கு பாராட்டு இடுகை எங்கே' என்று ஒருவர் நடாஷாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 'நடாஷா, நாங்கள் இனி காத்திருக்க முடியாது. ஹர்திக்குடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை நேரடியாகச் சொல்லுங்கள்' என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். 'உலகக் கோப்பை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இப்படிப்பட்ட மனைவி யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in