
சவுதி அரேபியா நாட்டின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக் குறிப்பில், சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு, குறைந்த பட்சம் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் பி.எஸ்சி, நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் நர்சுகள் தேவைப்படுகின்றனர். இப்பணியிடத்துக்கு டேட்டா ஃபுளோ மற்றும் எச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நர்சிங் பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான டிக்கெட் ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள், இந்நிறுவனத்தின் www.omcmanpower.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் சம்பளம் மற்றும் பணி விவரங்கள் குறித்து 9566239685, 6379179200, 044-22505886, 044-22502267 ஆகிய அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட நர்சிங் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்வதற்கு வசதியாக வரும் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமுக்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை ovemclmohsa2021@gmail.com இ-மெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப் பங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ. 35,400 மட்டும் வசூலிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அயல் நாட்டு நர்சிங் பணி தேடும் பெண் பணியாளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.