உஷார்... இன்ஃபுளுவென்சா காய்ச்சல்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

உஷார்... இன்ஃபுளுவென்சா காய்ச்சல்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃபுளுவென்சா வகை காய்ச்சலை கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ளது.

அதன்படி, ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் லேசான காய்ச்சல், இருமல் என்ற ஏ வகை, தீவிரக் காய்ச்சல், அதிக இருமல் என்ற பி வகை மற்றும் தீவிர காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, ரத்த அழுத்த குறைவு என்ற சி வகை என மூன்றாக பிரிக்கப்படுகின்றனர்.

ஏ மற்றும் பி வகையினருக்கு இன்ஃபுளுயன்சாவிற்கான பரிசோதனையோ, மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது.

சி வகை நோயாளிகள், அதாவது, இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருந்தால் RT PCR பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை, ஆய்வகங்களில் பணி புரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in