கிரேட் காளிக்கு ஆண் குழந்தை… வைரலாகும் சூப்பர் வீடியோ!

மனைவி, குழந்தையுடன் கிரேட் காளி
மனைவி, குழந்தையுடன் கிரேட் காளி

இந்தியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

காளி கடந்த 2002-ம் ஆண்டு தனது மனைவி ஹர்மிந்தர் கவுரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து கொண்டனர். பின்னர் தொடர் சந்திப்புக்கு பிறகு 2002 பிப்ரவரி 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மனைவியுடன் கிரேட் காளி
மனைவியுடன் கிரேட் காளி

2014-ம் ஆண்டு இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவ்லீன் ராணா என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அப்பா ஆகியுள்ள காளி, தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் கிரேட் காளிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in