பள்ளி பூட்டில் மலம் பூசிய விவகாரம்… அதிகாரிகள் அதிரடி விசாரணை!

பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பூட்டு
பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பூட்டு
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி பூட்டில் மலம் வைத்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி கதவின் பூட்டின் மேல் மர்ம நபர்கள் சிலர் மனித கழிவுகளை பூசிவிட்டு சென்றனர். தாமதமாக இதனை அறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி மாணவ மாணவியர்
பள்ளி மாணவ மாணவியர்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிரும் கண்டனம் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் தீபா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

போதுமான வகுப்பறைகள், கழிப்பறைகள் பள்ளியில் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும், பூட்டின் மீது மனிதகழிவை பூசியவர்கள் யார் என்பது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் சத்யா, ’பள்ளி பூட்டின் மீது மனித கழிவுகளை பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in