தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு...மேலும் குறைய வாய்ப்பு!

தங்கம்
தங்கம்

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்து சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூன் 22ம் தேதி அதிகபட்சமாக கிராமுக்கு 85 ரூபாய் வரை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது.

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

இதனால் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 6,625 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 280 விலை குறைந்து 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 94 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 94 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in