வாரத்தின் முதல் நாளில் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை... கிராமுக்கு ரூ.352 குறைந்தது!

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 352 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக தங்கத்தின் விலையில் இந்த விலையேற்றம் இருந்து வருவதாக வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் மாதம் 1ம் தேதி தங்கத்தின் விலை சற்று சரிவைச் சந்தித்து இருந்தது. நேற்று சென்னையில் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி கிராம் ஒன்றுக்கு 6,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்கம்
தங்கம்

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்குவதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 44 ரூபாய் குறைந்து 6,666 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 352 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்
தங்கம் - வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 70 பைசா குறைந்துள்ளது. நேற்று 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 97 ரூபாய் 30 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 97,300 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in