ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு... வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.100 தாண்டியது

தங்கம்
தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்றே குறைந்து வந்தது. தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து தங்கதின் விலை மீண்டும் உயர்ந்து போகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் ஒரே நாளில் கிராமுக்கு 75 ரூபாயும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து விற்பனையானது.

தங்க சுரங்கம் - தங்கம்
தங்க சுரங்கம் - தங்கம்

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்வைச் சந்தித்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 6,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம்த் 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 360 உயர்ந்து 54 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி நேற்று 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in