மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி... தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அதிரடியாக விலை உயர்ந்த ஆபரணத் தங்கம் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் வரையிலும் தங்கம் விலை உயர்ந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 45 ரூபாய் விலை குறைந்து 6,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்தது.

தங்கம்
தங்கம்

நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 6,710 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

இதே போல் இன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in