கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை... மருத்துவர் மீது பெற்றோர் புகார்!

கோழிக்கோடு அரசு மருத்துவமனை
கோழிக்கோடு அரசு மருத்துவமனை

கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் கையின் 6வது விரலை அகற்ற சென்ற சிறுமிக்கு, நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், சிறுவானூர் பகுதியை சேர்ந்த பெற்றோர், தனது 4 வயது சிறுமியின் கையில் ஆறாவது விரல் வளர்வதை அறிந்து அதை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அணுகினர். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் 6வது விரலை அகற்றி விடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தனர். இந்நிலையில், சிறுமியின் ஆறாவது கைவிரலை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்து விட்டதாக கூறிய பின்னர், சில மணிநேரங்களுக்கு பிறகு சிறுமியை பார்க்க பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்று பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. சிறுமியின் கையில் அவரது ஆறாவது கைவிரல் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.

கைவிரலை அகற்றாமல் வேறு எந்த அறுவை சிகிச்சையை செய்தீர்கள் என்று பதற்றத்துடன் பெற்றோர், மருத்துவரிடம் கேள்வி எழுப்பினர். கைவிரல் அகற்றும் அறுவை சிகிச்சை நடக்கவில்லை. சிறுமியின் நாக்கிற்கு அடியில் இருந்த அதிக சதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாக மருத்துவர் தெரிவித்தார். பின்னர், அறுவை சிகிச்சை ஆவணங்களை சரிபார்த்தபோது, அறுவை சிகிச்சை மாற்றி செய்யப்பட்டதை உணர்ந்த மருத்துவர், சிறுமியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

பின்னர், கைவிரல் நீக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். தங்களுடைய அனுமதி இல்லாமல் நாக்கிற்கு அடியில் இருந்த சதையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய மருத்துவர் மீது கேரள மாநில சுகாதாரத்துறையில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோல பல்வேறு சர்ச்சைகளில் கோழிக்கோடு அரசு மருத்துவமனை சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in