கோவையில் பரபரப்பு... “கெட் அவுட் போஸ்ட்மேன்” ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

கோவையில் பரபரப்பு... “கெட் அவுட் போஸ்ட்மேன்” ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கெட் அவுட் போஸ்ட்மேன் என்று திமுகவினர் நகர் முழுக்க போஸ்டர் ஒட்டி, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநருக்கும், ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநருக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் ஆளுநர் ரவி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

இதனால் திமுகவினர் ஆளுநருக்கு பல்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பழனி செல்ல இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பொள்ளாச்சியில் திமுகவினர் கண்டன போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக ஆளுநர் ரவி பழனிக்கு செல்ல உள்ள நிலையில், அவர் பயணிக்கும் பாதைகளில் இந்த எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு ஆளுநர் பொள்ளாச்சி வழியாக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஆளுநர் கண்ணில் படும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் ஆளுநர் ரவியை கடுமையாக கோபம் கொள்ளச் செய்யும் என்பதால் அதனை சினிமா போஸ்டர்களை கொண்டு மறைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆளுநருக்கு எதிரான நடவடிக்கையை திமுகவினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது பொள்ளாச்சி முழுவதும் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியினர் செய்திருந்தாலும், காவல்துறையினர் போஸ்டர்களை அப்புறப்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in