ஓடிடியில் நாளை வெளியாகிறது சூரியின் ‘கருடன்’ - 3 தளங்களில் ரிலீஸ்!

ஓடிடியில் நாளை வெளியாகிறது சூரியின் 
‘கருடன்’ - 3 தளங்களில் ரிலீஸ்!

சூரியின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற 'கருடன்' திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 3 ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி ‘விடுதலை’ படத்துக்குப் பின்னர் இப்போது முக்கியமான நடிகராக உருவெடுத்துவிட்டார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் மெகா ஹிட்டாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

'எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி', 'பட்டாசு' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.20 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், உலக அளவில் மொத்தமாக ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.

'கருடன்’ சூரி
'கருடன்’ சூரி

இந்நிலையில் ‘கருடன்’ படம் ஜூலை 3ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் அதுபற்றிய புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், சிம்ப்ளி சவுத், டெண்ட் கொட்டா ஆகிய ஓடிடி தளங்களிலும் கருடன் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in