அதிர்ச்சி... குடிபோதையில் காவல் நிலையத்தை தாக்கிய 3 பேர் கும்பல்!

அதிர்ச்சி... குடிபோதையில் காவல் நிலையத்தை தாக்கிய 3 பேர் கும்பல்!

கேரளாவில் காவல் நிலையத்தை தாக்கிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 16-ம் தேதி இரவு கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி பேருந்து நிறுத்தத்தில் கும்பல் ஒன்று ரகளையில் ஈடுபட்டது. பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தகராறில் ஈடுபட்ட கும்பல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு மூன்று பேரை கைது செய்தனர்.

பின்னர் போலீஸார் அவர்களை விடுவித்தனர். இதனால் அந்த கும்பல் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் நேற்று இரவு பாலுச்சேரி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது.

அதுமட்டும் இல்லாமல், பணியில் இருந்த காவலர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. மீண்டும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தாக்குதல் நடத்திய நிதின், பாபினேஷ், ராபின் பேபி என்ற மூன்று பேரை கைது செய்தனர்.

சிறை
சிறை

விசாரணையில் அவர்கள் மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் கோழிக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in