உஷார்... செப்.30 கடைசி தேதி; இந்த வாரத்துக்குள்ள மாத்திடுங்க!

2000 ரூபாய் நோட்டு
2000 ரூபாய் நோட்டு

வரும் செப்.30-ம் தேதி தான் கடைசி தேதி. அதுக்குள்ள கைவசம் வெச்சிருக்கிற ரூ.2000 நோட்டுக்களை மாற்றிடுங்க. அது வரை மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, கையில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் செப். 30-ம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.

2000 ரூபாய் நோட்டு
2000 ரூபாய் நோட்டு

ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in