குட் நியூஸ்... இன்று முதல் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்!

குட் நியூஸ்... இன்று முதல் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்!

நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று செப்டம்பர் 24 ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இதற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர். இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின நாளில் வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்கும் என தகவல் பரவிய நிலையில் அது தள்ளிப்போனது. பின்னர் பல்வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதம் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வந்தே பாரத் ரெயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை நிறுத்துவதற்கு கல்லூர், சுத்தமல்லி பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

இந்நிலையில் இன்று 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனால் ரெயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவையொட்டி இன்று 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சந்திப்பு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in