கோடையை சமாளிக்க நடவடிக்கை எடுக்காமல் கொடைக்கானலில் ஓய்வு எடுக்கும் முதல்வர்... ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

கோடை வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்தச் செயல் திட்டத்தையும் எடுக்காமல், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருமங்கலம் தொகுதியில் உள்ள உச்சப்பட்டி, திருமங்கலம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் இன்று நீர் மோர் பந்தல்களை திறந்து வைத்தார் ஆர்.பி.உதயகுமார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை அதிகமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பசலனத்தால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

குறிப்பாக, 19 மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்ப சலனத்தை எதிர்கொள்ள எந்த செயல் திட்டத்தையும் எடுக்கவில்லை. கோடை வெயில் காரணமாக முதலமைச்சர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று உள்ளார். வழக்கமாக, 4 முதல் 8 நாள்கள் வரை தான் வெப்ப அலை வீசும். ஆனால், தற்போது, மாதம் முழுவதும் வீசுகிறது. குறிப்பாக, இரவு நேரத்திலும் இந்த தாக்கம் அதிகரித்து இருப்பதால் மக்கள் வேதனை அடைந்து வருகிறார்கள்.

இந்தக் வெப்பசலனத்தால் தொண்டை வறட்சி, நீர் சத்துக் குறைதல், மயக்கம் ஆகியவை ஏற்பட்டு மக்கள் பாதிப்பு அடைகின்றனர். குறிப்பாக, அமைப்புசாரா தொழிலாளர்களான கட்டிட தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் எல்லாம் பாதிப்படைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லை. அதேபோல நிழல்குடையும் அமைக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் எல்லாம் வெயில் கொடுமையால் பாதிப்பு அடைந்து விடுகின்றனர். ஆனால் அவர்களை காப்பாற்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

குடிநீருக்கு ஆதாரமாக திகழும் வைகை, முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்களில் மூலம் ஆறுகளில் உரை கிணறு அமைத்து அதன் மூலம் நீர் வழங்கப்படும். ஆனால், தற்போது மூல ஆதாரமாக இருக்கும் வைகையே வறண்டு இருப்பதால் தற்போது கூட்டுநீர்திட்டம் ஸ்தம்பித்து உள்ளது. இது போன்ற கோடை காலங்களில் நீர்நிலைகளில் 23 சதவீதம் நீர் இருக்கும். தற்போது 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், குடிநீருக்கே அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in