பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம்: மாநிலங்களின் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் கடந்த பிப்ரவரி மாதம், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் வரும் ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கான தங்கள் கருத்துகளை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தெரிவிப்பதற்காக, அவற்றின் நிதியமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, இக்கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இதபோல், பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சிலின் 53வது கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

இக்கூட்டத்தில், உரங்கள் மீதான வரிகள், உரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், ஆன்லைன் கேமிங் வரிவிதிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தற்போது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான பராமரிப்பு, பழுது மற்றும் இயக்கம் (எம்ஆர்ஓ) சேவைகளின் இறக்குமதி மீதான வரி குறைப்பும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in