அதிர்ச்சி… ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து!

ரயில் விபத்து
ரயில் விபத்து

ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட  விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.

ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு ரயில்களில் ஒன்று, நூற்றாண்டு பழமையான பறக்கும் ஸ்காட்ஸ்மேன் ரயிலாகும். இது, மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணித்த முதல் நீராவி ரயில் ஆகும்.  

ரயில் விபத்து
ரயில் விபத்து

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஸ்காட்லாந்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக அவிமோர் நிலையத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in