தரை இறங்க முடியாமல் தவித்த விமானங்கள்... சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை!

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
Updated on
2 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. இதன் காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மழை
மழை

எழும்பூர், கோயம்பேடு, அண்ணாசாலை, கிண்டி,மந்தைவெளி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழையால் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதத்தால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

கனமழை
கனமழை

டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஐதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. இதன் காரணமாக17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. அவ்வப்போது இடி, மின்னல், சூறைக்காற்று ஓயும்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கின.

சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி செல்லும் விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in