அடேயப்பா... ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் விலை ரூ.25 கோடி: வைரலாகும் வீடியோ!

நொய்டாவில் கட்டப்பட்டு வரும் சொகுசு அடுக்குமாடி வீடுகள்.
நொய்டாவில் கட்டப்பட்டு வரும் சொகுசு அடுக்குமாடி வீடுகள்.

நொய்டாவில் கட்டப்படும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

வீடு கட்டுவது என்பது சாமானியர்களுக்கு மிகவும் கடினமான பணியாக உள்ளது. சிமென்ட், மணல், கல், இரும்பின் விலையை விட வீடு கட்டுவதற்கான நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கல்யாணத்தைக் கூட செய்து விடலாம் போலிருக்கிறது. ஆனால், வீட்டைக் கட்ட முடியாத நிலை உள்ளது. அப்படி வீடு கட்டினாலும் இஎம்ஐ கட்டினால் தான் உயிர் வரும்.

இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த என்சிஆர் பொறியாளர் ஒருவர், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி வருவதாகவும், நான்கு படுக்கையறை கொண்ட வீடு ரூ.15 கோடிக்கும், ஆறு படுக்கை அறை கொண்ட வீடு ரூ.25 கோடிக்கும் விற்பனை செய்வதாக தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு விலையுயர்ந்த குடியிருப்பை யார் வாங்குவார்கள்? அவர் எவ்வளவு வேலை செய்தாலும், எவ்வளவு வியாபாரம் செய்தாலும், முதலீடு செய்தாலும் இப்படிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடியுமா என்று அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் இந்த முன்பு இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ மொத்தம் 4.4 மில்லியன் பார்வைகளையும் பல கருத்துகளையும் பெற்றுள்ளது. மேலும், இது முன்னதாக ட்விட்டரில் வெளியிடப்பட்டது, அங்கு இது 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த காணொலியைப் பார்த்த மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்ந்து காணப்படுவதாக கூறியுள்ளனர். மேலும், நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்குப் பதிலாக நியூயார்க், சிங்கப்பூர் அல்லது துபாயில் வில்லா வாங்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இன்னொருவர், இவ்வளவு விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை, பிரச்சினைகளின் விளைநிலமாக வாங்காமல், அதே பணத்தில் வேறு இடத்தில் இடம் வாங்கி வீடு கட்டலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in