அஜித்தின் நண்பர்... ஆர்ட் டைரக்டர் மிலன் உடலுக்கு திரையுலகம் அஞ்சலி!

அஜித்துடன் மிலன்
அஜித்துடன் மிலன்

வெளிநாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த ஆர்ட் டைரக்டர் மிலன் உடல் இன்று சென்னை வந்த நிலையில் திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2006ம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

மிலன்
மிலன்

இந்நிலையில், கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் இருக்கும்போதே  மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  மாரடைப்பால் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பாதிவழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டில் இருந்து மிலானின் உடல் சென்னை வந்தடைந்தது. சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர், உறவினர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in