காவிரி விவகாரம்; பாடை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்!

காவிரி விவகாரம்; பாடை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்!

நாகை மாவட்டத்தில், காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காவிரி உழவன் உருவபொம்மையை பாடை கட்டி தூக்கிச் செல்லும் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், காய்ந்த குறுவை பயிர்களுக்கு காப்பீட்டுக்கு இணையான நிவாரணம் தர வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். காவிரியில் டெல்டாவிற்கு வழங்கக்கூடிய உரிமை பங்கு நீரை கர்நாடகம் திறந்து விடாததை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் உச்சநீதிமன்றம் காவிரி தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரித்து காவிரி உரிமை நீரை தினசரி பங்கீட்டின் அடிப்படையில் பிரித்து வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ந்து, கைவிடப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டிற்கு இணையான நிவாரணம் வழங்கிடவும், பகுதி பாதித்த உழவர்களுக்கு டீசல் மானியம் வழங்கிட உதவிட கோரியும், குறுவைப் பயிருக்கான காப்பீடு வரும் காலங்களில் அரசே ஏற்று நடத்திடவும் வலியுறுத்தியும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in