இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மோடியா? பிசிசிஐக்கு வந்த புதிய தலைவலி

விராட், ரோகித், பிரதமர் மோடி
விராட், ரோகித், பிரதமர் மோடி
Updated on
2 min read

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பெயரில் போலி விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது பிசிசிஐ அமைப்பிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பதவி வகித்து வருகிறார். ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு பிறகு அவர் பதவிக்காலம் நிறைவடைகிறது. மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக தொடர ராகுல் டிராவிட் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ அமைப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் புதிய பயிற்சியாளராக விரும்புவோர் பிசிசிஐ இணையதளம் வாயிலாக மே மாதம் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ அமைப்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், அதனை ஆய்வு செய்த போது பிசிசிஐ அமைப்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இந்திய கிரிக்கெட் வாரியம்
இந்திய கிரிக்கெட் வாரியம்

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்களில் போலியான விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டிருந்தது. இந்த போலி விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்ய சில நாட்கள் ஆகும் எனவும், உண்மையான விண்ணப்பங்களை கண்டறிவதில் இதனால் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் பிசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

மோடி மற்றும் அமித் ஷா
மோடி மற்றும் அமித் ஷா

இது போன்ற போலி விண்ணப்பங்கள் பெறப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த முறை இதேபோன்று பிசிசிஐ சார்பில் விண்ணப்பங்களை மெயில் மூலம் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 5,000 மேற்பட்ட பிரபலங்களின் பெயரில் போலி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கூகுள் பார்ம்ஸ் மூலமாக விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in