குட்நியூஸ்... எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

ரயில்
ரயில்

சென்னை எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06030) வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06029) வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்
ரயில்

இதேபோல, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06070) வரும் 4, 11, 18 ஆகிய தேதிகள் வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06069) வரும் 5, 12, 19 ஆகிய தேதிகள் வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in