பணம் கேட்டு பெண் டார்ச்சர்... மனைவி, மகளுடன், முன்னாள் ராணுவவீரர் தற்கொலை!

மனைவி விசாலினியுடன் ரமேஷ்
மனைவி விசாலினியுடன் ரமேஷ்

கடன் தொல்லையால் முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோ.புதூரை அடுத்த சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான ரமேஷ் (41). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மனைவி விசாலினி (36), மகள் ரமிசா ஜாஸ்பெல் (12) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், மகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்த ரமேஷ் அதன் பிறகு வீட்டுக்கதவை திறக்கவில்லை. இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், ரமேஷின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு வீட்டின் உள்ளே ரமேஷ், அவரது மனைவி, மகள் ஆகியோர் இறந்து கிடந்தனர். 3 பேரும் விஷம் குடித்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது உடல்களைப் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரமேஷ் கடன் வாங்கி அதனை திரும்பச் செலுத்த முடியாமல் இருந்ததாக தெரிகிறது. எனவே அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் ரமேஷ் எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், நரிமேட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து பெண் தரப்பில் பணம் கேட்டுத் தொல்லை கொடுத்ததால், தற்கொலை கொண்டதாகவும் கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in