நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை படிக்கலாம்!

நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை படிக்கலாம்!

நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முடிந்தநிலையில், 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வு எழுதி இருந்தால் போதுமானது. மதிப்பெண் எடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் (மருத்துவம்/ பல் மருத்துவம்) என்பது விண்ணப்பத்தாரர்களின் கலந்தாய்வில் அனைத்து வகைகளிலும் பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பதிவு செய்துள்ள விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in