பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து... 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இங்கிலாந்து அணி
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இங்கிலாந்து அணி
Updated on
2 min read

பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் துவங்க உள்ளது. இதையொட்டி பல்வேறு நாட்டு கிரிக்கெட் அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான அணிகளும் அமெரிக்காவிற்கு சென்றுவிட்ட நிலையில், சில அணிகள் ஏற்கனவே முடிவு செயப்பட்டிருந்த தொடர்களில் விளையாடி வருகிறது.

2-0 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது
2-0 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. 3வது போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 4வது மற்றும் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் 38 ரன்களும், பாபர் அசாம் 36 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள்

இதனால் அந்த அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டும் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அதில் ரஷீத், லியான் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 45 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பில் ஜேக்ஸ் 20 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் இணை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஹாரி புரூக்ஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த அணி 15.3 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆட்டநாயகனாக அதில் ரஷீதும், தொடர் நாயகனாக ஜோஸ் பட்லரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in