சோகம்... நடையை கட்டியது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து!

சோகம்... நடையை கட்டியது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து!

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை  தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 286 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் ஆட்டம் 48.1 ஓவர்களில் 253 ரன்னில் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா தற்போது கம்பேக் கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று தோல்வி அடைந்ததை அடுத்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 வெற்றிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து, தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ளன. இந்நிலையில் இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in