அதிர்ச்சி… மனைவி கிராமத்தான் என்று திட்டியதால் கணவன் தற்கொலை!

அதிர்ச்சி… மனைவி கிராமத்தான் என்று திட்டியதால் கணவன் தற்கொலை!

மனைவி தன்னை கிராமத்தான் என்று கூறியதால் மன உளைச்சலில் பொறியாளர் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38) என்பவர் மெட்ரோவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், மஞ்சுநாத் திடீரென தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த மஞ்சுநாத் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், மஞ்சுநாத்தின் மனைவி பிரியங்கா அவரை, அடிக்கடி கிராமத்தான் என்று கூறி விமர்சித்து வந்ததாக தெரிகிறது. அதுமட்டும் இல்லாமல் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும் கணவரிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுநாத், மனைவி தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக, தனது சகோதரருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in