நீட் தேர்வு ரத்தா? - தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவசர ஆலோசனை

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Updated on
2 min read

நீட் தேர்வு மற்றும் யுஜிசி நெட் தேர்வு விவகாரங்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதமர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததாகவும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று, ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வின் போது ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக வெளியான தகவலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமை

இதையடுத்து நீட் தேர்வு கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், கலந்தாய்வுகளை ரத்து செய்ய முடியாது என மறுத்துவிட்டது. இதனிடையே தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜிசி நெட் தேர்விலும் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்த நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் நீட் தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in