வைகோ நலமுடன் உள்ளார்; வதந்திகளை நம்பாதீர்கள்... துரை வைகோ வேண்டுகோள்!

துரை வைகோ
துரை வைகோ
Updated on
2 min read

"மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட நினைக்கிறார்கள். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். அதனால் அவரது உடல்நிலை குறித்த வதந்தைகளை நம்பாதீர்கள்" என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் வைகோ தங்கியிருந்தபோது தடுமாறி கீழே விழுந்ததாக தகவல் வெளியானது. இதில், அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் வைகோவின் உடல்நிலை குறித்து பலவிதமான தகவல்கள், சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

வைகோ
வைகோ

இதுகுறித்து வைகோவின் மகனும், மதிமுகவின் முதன்மை செயலாளருமான துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே தந்தையின் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள். தந்தை எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார்.

தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார். எனவே அவரது உடல்நிலை குறித்து வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால் யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம். விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ இல்லம் திரும்புவார். அதன்பிறகு கட்சி தொண்டர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தலைவர் வைகோ அவர்களின் மீது அக்கறையும், அன்பும் கொண்டு நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள், தலைவர் வைகோவின் சுவாச காற்றாக விளங்கும் மறுமலர்ச்சி சொந்தங்கள் அனைவருக்கும் என் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் திடீர் மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு!

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

டெல்லியில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

தாய்லாந்தில் திருமணம்... சென்னையில் ரிசப்ஷன்... நடிகை வரலட்சுமியின் அடடே பிளான்!

மே 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in