கனமழை... இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை... இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருவதாக கூறியுள்ள வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

நீலகிரி, கோவை, ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது‌. சென்னை மற்றும் சென்னை புறநகரில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து  இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகள் உட்பட விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதே போல் தென்காசி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் அடுத்த நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in