சொத்து பிரச்சினை… தம்பியை தீ வைத்து கொன்ற கொடூர அண்ணன்!

சொத்து பிரச்சினை… தம்பியை தீ வைத்து கொன்ற கொடூர அண்ணன்!

சொத்து பிரச்சினை காரணமாக நெல்லையில் அண்ணனே தம்பியை தீ வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளியான வானமாமலை (30) என்பவர் மாடுகள் வளர்த்து வந்தார். இவர் கடந்த வாரம் மது அருந்தி விட்டு வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர். கண் விழித்த வானமாமலை அலறி அடித்து ஓடியுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீ வைத்தது யார், அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் வானமாமலை மற்றும் அவரது அண்ணன் குபேந்திரன் ஆகிய இருவருக்குமிடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. எனவே இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் குபேந்திரன் தனது தம்பி வானமாமலை தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது தின்னரை ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குபேந்திரனை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வானமாமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து குபேந்திரன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in