
புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான மத்திய சாலை பாதுகாப்பு கமிட்டி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு இறுதி மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுச்சேரியில் இக்குழு ஆய்வு நடத்தியது. அப்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும், கடலுார், விழுப்புரம் சாலையில் அதிகவேக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஜனவரி முதல் கடந்த மாதம் 22-ம் தேதி வரை தலைக்கவசம் அணியாத 45,000 பேர் உட்பட 53,500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 25,000 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக, அதாவது மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
லைசென்ஸ் ரத்து தொடர்பான குறுஞ்செய்தி செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு 5 நாட்களில் லைசென்ஸ் சஸ்பென்ட் செய்யப்படும். விதிமீறலில் ஈடுப்படாமல் லைசன்ஸ் சஸ்பென்ட் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்திருந்தால், போக்குவரத்து துறை அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லைசென்ஸ் சஸ்பென்ட் செய்யப்பட்ட நபர் 3 மாத காலத்திற்குள் மீண்டும் வாகனம் ஓட்டி விதிமீறலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!