நவீன் பட்நாயக் விகே பாண்டியன்
நவீன் பட்நாயக் விகே பாண்டியன்

வதந்தியை பரப்பாதீர்கள்... உடல்நிலை குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு நவீன் பட்நாயக் பதிலடி!

Published on

“ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய குழு அமைக்கப்படும்” என்று பிரதமர் கூறியதற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ‘உடல்நலப் பிரச்சினைகள்’ முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று நவீன் பட்நாயக் மேடையில் பேசும்போது, அவரின் கை நடுங்குவதையும், அதனை வி.கே.பாண்டியன் மறைப்பதையும் பகிர்ந்த அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘ நவீன் பட்நாயக்கை பாண்டியன் கட்டுப்படுத்துகிறார்’ என ட்வீட் செய்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் இன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஒடிசாவின் பரிபாடாவில் இன்று நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்குப் பின்னால் சதி உள்ளதா?. அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்கு அவர் சார்பாக தற்போது பட்நாயக் அரசை நடத்தும் லாபி காரணமா?. ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழுவை பாஜக அரசு அமைக்கும்” என்று கூறினார்.

பிரதமர் மோடி, நவீன் பட்நாயக் (கோப்பு படம்)
பிரதமர் மோடி, நவீன் பட்நாயக் (கோப்பு படம்)

பிரதமர் இவ்வாறு பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இதற்கு கிண்டலாக பதிலளித்த நவீன் பட்நாயக், "ஒரு தொலைபேசியை எடுத்து என் உடல்நிலை பற்றி என்னிடம் பிரதமர் கேட்டிருக்கலாம். கடந்த ஒருமாத காலமாக நான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். நான் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன். அவர் (பிரதமர்) முன்பு பொதுவெளியில், 'நான் அவருடைய நல்ல நண்பர்' என்று கூறினார். அப்படியானால் அவர் செய்ய வேண்டியதெல்லாம், தொலைபேசியை எடுத்து எனது உடல்நிலை குறித்து கேட்டறிவதுதான் நல்லது. ஆனால் அவர் இதுகுறித்து வதந்தியை பரப்புகிறார், ஒடிசா மற்றும் டெல்லியைச் சேர்ந்த பாஜகவினர் என் உடல்நலம் குறித்து வதந்திகளைப் பரப்புகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் மற்றும் 21 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்துடன் கடும் போட்டியில் இறங்கியுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in