பகீர்… பெண் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்!

பகீர்… பெண் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்!

ஆந்திராவில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் கத்திரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை மேற்கொள்ளப்பட்டது. குழந்தை பிறந்து வீடு திரும்பிய அந்தப் பெண் கடந்த நான்கு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்ததை கண்டறிந்தனர். இதனை வெளியே தெரியாமல் மறைக்க மருத்துவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது.

ஆனால் எக்ஸ்ரேயை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மருத்துவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அந்தப்பதிவு நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை விஜயவாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளியே தெரியாமலும் மருத்துவர்கள் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த சம்பவத்திற்கு காரணமான அனைவரும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மருத்துவ வளர்ச்சி அதிகம் இல்லாத காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதை அறிந்திருப்போம். ஆனால் இந்த நவீன யுகத்திலும் இதுபோன்று அவலங்கள் தொடர்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in