தோல்வி பயத்தால் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை... அமைச்சர் பொன்முடி விமர்சனம்!

அமைச்சர் க.பொன்முடி
அமைச்சர் க.பொன்முடி
Updated on
1 min read

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி பயத்தால் போட்டியிடவில்லை என அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பொன்முடி, மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார்

தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் அன்னியூர் சிவா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தோல்வி பயத்தால் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அதிமுக, பாமக, பாஜக ஆகியவை இணைந்து திமுகவை எதிர்கொண்டனர். இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.” என்றார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார்

மேலும், “மகளிருக்கான பல்வேறு சாதனைகள் தான் இந்த தேர்தலில் வெற்றியாக அமையும். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவா வெற்றி பெறுவார்.” என்றார். திமுகவைத் தொடர்ந்து பாமக வேட்பாளர் அன்புமணியும் இன்றே தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஜூன் 21ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in