தயாநிதி மாறன், கனிமொழி முன்னிலை... தென் சென்னை, புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

தயாநிதி மாறன்.
தயாநிதி மாறன்.

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனும், தூத்துக்குடி பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியும், முன்னிலை பெற்றுள்ள நிலையில் தென்சென்னை, மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை பணி தாமதம் ஆகிவருகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 8.30 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கும்.

வாக்கு எண்ணும் பணி
வாக்கு எண்ணும் பணி

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்து வருகிறார். இதே போல் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறார்.

கனிமொழி
கனிமொழி

இருப்பினும் தென் சென்னை மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தபால் வாக்குகளை பிரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் தென்சென்னை பகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு வாக்கு சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவதற்கு தாமதமானதால் அங்கு வாக்கு எண்ணிக்கை பணி தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in