விஜயகாந்தைத் தொடர்ந்து 'GOAT' படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்... வெங்கட்பிரபு உருக்கம்!

விஜய், வெங்கட்பிரபு
விஜய், வெங்கட்பிரபு

நடிகர் விஜயகாந்தைத் தொடர்ந்து இன்னொரு பிரபலத்தை 'GOAT' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.

விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 5 அன்று இந்தத் திரைப்படம் வெளிவர இருப்பதால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏஐ தொழில்நுட்பத்தில் அவரைத் திரையில் கொண்டு வந்துள்ளது படக்குழு.

விஜயகாந்த், விஜய்
விஜயகாந்த், விஜய்

இந்த விஷயத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா முன்பொரு பேட்டியில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்போது விஜயகாந்த்தோடு இன்னொரு மறைந்த பிரபலமும் ஏஐ தொழில்நுட்பத்தில் இணைந்திருக்கிறாராம். அவர் வேறு யாருமில்லை. வெங்கட்பிரபுவின் தங்கை, பாடகி பவதாரிணிதானாம் அது.

தனது மெல்லிய குரல்வளத்தால் ரசிகர்களைக் கவர்ந்தவர் பவதாரிணி. அவரது எதிர்பாராத மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்துள்ளாராம் வெங்கட்பிரபு.

 ‘GOAT'
‘GOAT'

இந்தத் தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பவதாரிணி குரலில் வர இருக்கும் பாடலை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in