இன்னும் சில மணி நேரங்களில் லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஸ்பாய்லர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லியோ ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தனது எண்ணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்க்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். உங்களது அர்ப்பணிப்புக்காக நான் எப்போதும் உங்களை மதிக்கிறேன் என கூறியுள்ளார்.
லியோ படத்திற்காக ரத்தத்தையும், வியர்வையும் உழைப்பாக செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இதில் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
லியோ அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடையதாக இருக்கும். உங்களுக்கு அற்புதமான காட்சி அனுபவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ரசிகருக்கும் தனித்துவ அனுபவத்தை தர விரும்புவதால், படம் குறித்து ஸ்பாய்லர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா என்ற உங்களது அனைத்து எல்லா கேள்விகளுக்குமான பதிலை இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.