புதிய பதவி... ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்!

 தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

2025-ல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து குட்பை சொன்ன நிலையில், தற்போது பயிற்சியாளர் பதவியுடன் அவர் புதிய இன்னிங்ஸை தொடங்க உள்ளார். ஆர்சிபி அணியுடன் தனது புதிய இன்னிங்ஸை அவர் தொடங்கியுள்ளார். அதன்படி, ஐபிஎல் 2025-ல் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் பணியாற்றுவார். இந்த பதவியுடன் அவர் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

கடந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது 17 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில் மொத்தம் 6 அணிகளுக்காக தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று தந்தார். இதன் பிறகு பல அணிகளுக்காக விளையாடியும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. குறிப்பாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் அவரது கனவு கனவாகவே உள்ளது.

தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2008-ல் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக விளையாடினார். 2012-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், 2014-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்பினார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

2015-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். இதையடுத்து 2016-17-ம் ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், 2018 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இதையடுத்து ஆர்சிபி அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், ஐபிஎல் 2024-ம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடி விடைபெற்றார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

ஐபிஎல்லில் மொத்தம் 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 22 அரைசதங்களுடன் மொத்தம் 4842 ரன்கள் குவித்துள்ளார். இம்முறை அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ரன்கள். இது தவிர தோனிக்கு பிறகு அதிக போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக, வழிகாட்டியாக புதிய இன்னிங்ஸை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in