திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்: ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் முடிந்தும், பக்தர்கள் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நேற்று தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, கிரிவலம் சென்றனர். நேற்று கோயிலுக்கு வெளியே சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்

இந்நிலையில் இன்று காலை 7.19 மணிக்கு பவுர்ணமி முடிவடைந்தாலும், இரண்டாவது நாளாக இன்றும் சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறை தினம் தொடர்ந்து வருவதால் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு வந்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்துத் துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, காவல் துறையினர் ஆங்காங்கே பணியமர்த்தப்பட்டு பக்தர்கள் வரிசையை ஒழுங்குபடுத்தினர். பக்தர்களுக்கு குடிநீர், நீர் மோர் போன்றவை வழங்கவும், விரைவில் சாமி தரிசனம் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in