ஆனி மாத அமாவாசை... முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
Updated on
1 min read

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இன்று ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒன்று கூடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஆனி மாத அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் - ஆனி அமாவாசை நீராடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் - ஆனி அமாவாசை நீராடல்

அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள்ளே காவேரி, சேது மாதவர், மகாலட்சுமி உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திப் உத்தரவின் பேரில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீஸார் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பவானி கூடுதுறை
பவானி கூடுதுறை

இதே போல், பவானி கூடுதுறை, கோவை பேரூர் நொய்யல் படித்துறை, திருச்சி காவிரி ஆறு, திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, தஞ்சாவூர் பாபநாசம் ஆகிய நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதையடுத்து இப்பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in