பெங்களூருவில் டெங்கு உயிரிழப்பு அதிகரிப்பு... அதிர்ச்சி தரும் சுகாதார ஆய்வறிக்கை!

டெங்கு
டெங்கு

பெங்களூருவில் கடந்த 4 நாட்களில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெங்களூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் டெங்குவால் பெங்களூருவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு
பெங்களூரு

தற்போது 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பிபிஎம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்த 80 வயது மூதாட்டியின் மரணம் டெங்குவால் ஏற்பட்டது அல்ல என்றும், புற்றுநோயால் ஏற்பட்டதாக அரசுக்கு சமர்பிக்கப்பட்ட பிபிஎம்பி சுகாதாரத் தணிக்கை தெரிவித்துள்ளது. அதில், ஜூன் மாதத்தில் புதிதாக 213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1742 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

இதனால் டெங்கு பரவல் மற்றும் பீதியைக் கட்டுப்படுத்தவும், இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறியவும் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார தணிக்கை நடத்தப்பட்டது. பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட இரு மரணங்கள் டெங்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு வேகமாக பரவி வருவதால் கர்ப்பிணிகள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, கர்நாடகா மாநிலம் முழுவதும் மொத்தம் 93,012 சந்தேகத்திற்கிடமான டெங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் 5,878 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரில் 310 பேரும், பெங்களூரு கிராமப்புறத்தில் 467 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

தும்கூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களில் 170 பேருக்கும், கடக்கில் ஒரே மாதத்தில் 31 குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாண்டியாவில் 2 மாதங்களில் 150-க்கும் மேற்பட்டோரும், ஹாவேரியில் 500 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 140 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொசு உற்பத்தியாகும் இடங்களை சுகாதாதாரத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்பினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in