நாளை ஆடிப்பெருக்கு.. 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை... லிஸ்ட்ல திருச்சி, தஞ்சாவூர் கிடையாது! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

நாளை ஆடிப்பெருக்கு.. 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை... லிஸ்ட்ல திருச்சி,  தஞ்சாவூர் கிடையாது! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

என்னங்கய்யா உங்க நியாயம் என்று திருச்சி, தஞ்சாவூர் மக்கள் சமூக வலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நாளை தங்கள் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்ககோரி, கோரிக்கை வைத்து வருகின்றனர். நாளை 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடிப்பெருக்கு தினத்திற்கு இதுவரை காவிரி கரைப்புரண்டோடும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படாதது அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி18ம் தேதியை ஆடிப்பெருக்கு  தினமாக தமிழக மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் விவசாயிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள்  உள்ளிட்ட பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரி அன்னைக்கு பழங்கள்,  பூ உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவார்கள்.  அதன்படி இந்த ஆண்டு நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. 

இதனை முன்னிட்டு  தருமபுரி மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் அந்த மாவட்ட ஆட்சியர். ஆனால் ஆடி 18-ம் பெருக்கு என்றாலே டெல்டா பகுதியில்  காவிரியில் புரண்டோடும் புதுவெள்ளமும், அதற்கு ஈடாக  ஆற்றங்கரைகளில் கூடும் ஆயிரக் கணக்கான புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டவர்கள்தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.

அப்படி இருக்கும்போது திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு தினத்திற்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது போல மேற்கண்ட  மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆடி 18 தினத்திற்கு விடுமுறை விட்டால் மக்கள் மட்டுமல்ல விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in