மூன்றாம் முறையாக இன்று மாலை பிரதமர் பதவியேற்கும் மோடி... விழாக்கோலத்தில் தலைநகரம்

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இன்று மாலை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி. இதற்காக தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

வேண்டும் மோடி; மீண்டும் மோடி என்ற பாஜகவினரின் முழக்கம் ஒருவழியாக பலிதமாகி இருக்கிறது. ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர், சுதந்திர இந்தியாவில் இரண்டாவது முறையாக தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் சாதனையை படைக்கிறார் நரேந்திர மோடி.

தனிப்பெரும்பான்மை கிட்டாதபோதும் கூட்டணிகள் உதவியோடு ஆட்சியமைக்கிறது பாஜக. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளால் ஒரு சில சலசலப்புகள் எட்டிப்பார்த்தாலும், பாஜக தனது வெற்றிகரமான ஆட்சியை தொடரவிருக்கிறது. மோடி 3.0 ஆட்சியின் தொடக்கத்தை பிரம்மாண்டமாக நடத்தும் பொருட்டு தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மோடியுடன் அவரது அமைச்சர்கள் குழு உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளனர்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளின் அங்கமாக, டெல்லி காவல்துறையின் சுமார் 1,100 போக்குவரத்துக் காவலர்கள் நிறுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கான ஆலோசனையும், அரசியல் பிரதிநிதிகளுக்கான தடையற்ற பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மொரீஷியஸின் பிரவிந்த் குமார் ஜுக்நாத்செஷல்ஸ் துணைத் தலைவர் அகமது அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இவர்களுடன் நாடாளுமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நாடெங்கிலும் இருந்து பல்துறை பிரதான சாதனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் மோடியின் பதவியேற்பு விழா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in